அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்


அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
x

கைம்பெண், ஆதரவற்ற மகளிர் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். கைம்பெண்கள் பிரதிநிதிகள் 4 பேர், பெண் கல்வியாளர்கள் 2 பேர், பெண் தொழில் முனைவோர்கள் 2 பேர், பெண் விருதாளார்கள் 2 பேர், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணமும், பயணப்படியும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேற்காணும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பி பிளாக் முதல் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பித்தினை பெற்று பூர்த்தி செய்து வருகிற 7-ந் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story