இன்று முதல் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டயப்படிப்பு முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 8 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டுக்கு தகுதிவாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தக் கல்வியாண்டில் பகுதிநேர இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும். இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு 0422-2590080, 9486977757 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.