தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
திருச்சி
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-க்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் வருகிற 30-ந்தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். 30-ந்தேதிக்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story