தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி, விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வணிகர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டிடத்திற்கான வரைபடம், கடை அமைய உள்ள இடத்திற்கான ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, விசாரணை முடிவுப்பெற்ற பின் ஆன்லைன் மூலமாகவே மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா?, நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தெரிவிக்கப்படும். இ- சேவை மையம் மூலமாகவே உரிமத்திற்கு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பின் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.


Next Story