வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகிய 9 வட்டாரங்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். பட்டப்படிப்பு மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் கணினியில் குறைந்தது 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பத்தை https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணையவழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றிட வேண்டும். கடந்த 22-ந்தேதி காலை 11 மணி முதல் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story