சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக நீதிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தென்காசி கலெக்டர் ஆகாஷ் தகவல்

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகை, ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் தகுதி உரை ஆகியன வழங்கப்படுகிறது.

அதன்படி 2022-ம் ஆண்டிற்கு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு இதனை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடைய நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தங்களது பெயர், பிறந்த இடம், நாள், தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி, தொலைபேசி எண், கல்வி தகுதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கைகளில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு போன்ற விவரங்களை உள்ளடக்கிய தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இதற்கான கடைசி தேதி 31-10-2022 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story