திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
x

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்லூரியில் உதவி மையம் மாணவர்களின் நலனுக்காக நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கணிதவியல், இயற்பியல், கணினி அறிவியல், பி.சி.ஏ, பி.காம், பி.பி.ஏ., எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி, கம்ப்யூட்டர், கணிதவியல், எம்.காம் வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும், நடப்பு கல்வியாண்டு முதல் எம்.சி.ஏ முதுநிலை பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படுகிறது.

டான்சிட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த கல்லூரியை தேர்ந்து எடுத்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

----

Reporter : V. RAJADURAI_Staff Reporter Location : Vellore - TIRUPATHUR DEPOT


Next Story