சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்


சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதியன்று விருது வழங்கப்படும்.

இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story