பொருளாதார கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்


பொருளாதார கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

பொருளாதார கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினர் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள், தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக சாத்திய கூறு உள்ள சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய பொதுக்காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் தொகை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன்உதவி வழங்கப்படும். பொதுகாலகடன், தனிநபர் கடன் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

நுண்கடன் திட்டத்தில் மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1¼ லட்சம் வரையும், குழுவுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.ஒரு குழுவில் அதிகபட்சம் 20 பேர் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு கறவை மாடு வாங்க ரூ.60 ஆயிரம் கடன் வழங்கப்படும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்சு, ஆதார் அட்டை, வங்கி கோரும் ஆவண நகல்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----------------


Next Story