சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 May 2023 2:30 AM IST (Updated: 7 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூ.1 லட்சத்துடன், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே இந்த விருதுக்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டு தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story