கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறையில் 9 தாலுகா அலுவலகங்களில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அளிக்க கோரி கடந்த மாதம் 10, 11-ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 9 தாசில்தார்களும் அறிக்கை வெளியிட்டனர். கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தின்படி கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் வழங்க கோரப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் www.tn.gov.in, cra.tn.gov.in, ramanathapuram.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். எனவே நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக தவறாது விண்ணப்பிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story