இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்


இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

27-ந்தேதி இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற இருப்பதை யொட்டி இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் 3,552 பணிகாலியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் 27-ந் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8098308754 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது கள்ளக்குறிச்சி 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து,டி.என்.யூ.எஸ்.ஆர்.பி. விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பித்து இலவச மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


Next Story