மானியத்துடன் கறவை மாடு வாங்க விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் கறவை மாடு வாங்க விண்ணப்பிக்கலாம்
x

மானியத்துடன் கறவை மாடு வாங்க விண்ணப்பிக்கலாம் என கலக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பிளர்களாக உள்ளவர்களுக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.1½ லட்சம் திட்ட தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராகவும், 18 வயது முதல் 65 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இந்ததிட்டத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரரின் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாடு வாங்குபவரிடமிருந்து பச்சை தாளில் மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்கிய ஆவணங்களுடன் தாட்கோ இணையதளம் ஆதிதிராவிடர்களுக்கு https://application.tahdco.com மற்றும் பழங்குடியினர்களுக்கு https://fast.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story