காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம்


காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் தகவல்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 244 விற்பனையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://www.drbvpm.in என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விற்பனையாளர் பணிக்கு எளிதாக விண்ணப்பிக்க ஏதுவாக கூட்டுறவுத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டு முறைகளை www.youtube.com-ல் உள்ள TN COOP DEPT Channel-ல் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story