திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்


திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 11:49 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

சர்வதேச அளவிலான 47-வது திறன்போட்டிகள் வருகிற 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சில் உள்ள லியான் நகரில் நடைபெறவுள்ளது. இதற்கு வருகிற 2023 டிசம்பர் மாதம் நடைபெறும் இந்தியா ஸ்கில்ஸ் 2023 திறன்போட்டியில் பங்குபெறும் வகையில் தகுதி வாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் டி.என்.ஸ்கில்ஸ் 2023 நடத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன்போட்டிகள் வருகிற 15-7-2023 அன்று நடைபெற உள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் நடைபெறும் திறன்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

55 போட்டிகள்

அதேபோல் மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் மண்டல அளவிலான திறன்போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் வருகிற டிசம்பர் மாதம் 2023-ல் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன்போட்டியில் கலந்து கொள்ளலாம். மொத்தம் உள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒருபிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இதில் 45 திறன் பிரிவுகளில்பங்கேற்பவர்கள் 1.01.2002அன்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களாகவும், வாட்டர் டெக்னாலஜி, சைபர் செக்யூரிடி, இன்டஸ்ட்ரி 4.0, மெக்கட்ரானிக்ஸ், ரோபோட் சிஸ்டம்ஸ், இன்டிகிரேசன் அடிட்டிவ்மேனுபேக்ச்ஸரிங், கிளவுட் கம்பியூட்டிங், டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்சன், இன்டஸ்டிரியல் டிசைன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டிசைன் டெக்னாலஜி, இன்பர் மேசன் நெட்வொர்க் கேபிளிங் போன்ற பிரிவுகளுக்கு 1.01.1999 அன்றும் அதற்கு பின்னரும் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இப்போட்டியில் பங்கேற்க தனித்திறன் பெற்ற 10 வயது நிரம்பியவர்கள் முதல் உயர்நிலைக்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ சார்பு துறைகளில் படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தனித்திறன் பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழிற்பழகுனர் பயிற்சி பெறுபவர்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலக முதல்மாடி, விழுப்புரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story