சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்


சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
x

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பு என்ற பிரிவிற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், துணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய பணியிடங்களுக்கும் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான தகுதி, தேர்வுமுறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்கு கரூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் https://districts.ccourts.gov.in/karur தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story