ஆணையரை நியமிக்க வேண்டும்


ஆணையரை நியமிக்க வேண்டும்
x

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று த.மா.கா. கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டம் பழனியப்பன் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர தலைவர் ஏ.கே.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர் நாடிமுத்து, மோகன்ராஜ், நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசகுமார், ஜி.எஸ். நாடிமுத்து, சுரேஷ், முருகேசன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் , பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆணையர் இல்லாமல் பல மக்கள் பணிகள் தேங்கி கிடக்கின்றன. பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. எனவே புதிய ஆணையரை நியமிக்க கேட்பது, பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்கால்கள் முழுவதும் தூர்வாரப்படாமல் நிரம்பி வழிகிறது. எனவே குப்பைகளை அகற்றி, கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஏசுராஜ் நன்றி கூறினார்.


Next Story