கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்குஒப்பந்த பணியாளர்கள் நியமனம்விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்
கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
கடலூர் மாவட்ட பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை குழும இயக்குனர் தேசிய ஊரக நல வாழ்வு சங்க அரசாணைப்படி, கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட நல வாழ்வு சங்கத்திற்கு தொகுப்பூதிய பணியிடங்களில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக இந்த தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு மாவட்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இணைய தள முகவரியான dio-cdl@nic.in, dio-tncud@nic.in என்கிற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் 25.2.2023. இந்த அரசாணையில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்ய வழங்கப் பட்டுள்ள வழிகாட்டுதலின்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.