3 போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்


3 போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
x

பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக காலியாக இருந்த 3 போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்களை நியமித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலி

பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக காலியாக இருந்த 3 போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்களை நியமித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பற்களை பிடுங்கிய விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் மீது, அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட பலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

3 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

இந்த நிலையில் காலியாக இருந்த அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் அம்பை போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மனவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கல்லிடைக்குறிச்சிக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்து உள்ளார்.


Next Story