15 மண்டலங்களில் இரவு நேர சிறப்பு குடிநீர் வாரிய அதிகாரிகள் நியமனம் - செல்போன் எண்கள் அறிவிப்பு
பருவமழையின் போது கழிவுநீர் மற்றும் குடிநீரேற்று நிலையங்கள் இரவு, பகலாக இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில் 72.7 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 10 முதல் 240 எச்.பி. திறன் கொண்ட 313 கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளது. பருவமழையின் போது கழிவுநீர் மற்றும் குடிநீரேற்று நிலையங்கள் இரவு, பகலாக இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பகலில் பகுதி மற்றும் வார்டு பொறியாளர்கள் கண்காணிக்கின்றனர். இதே போல் இரவு நேரத்தில் கண்காணிக்க 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் நாளை (1-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை இரவு நேரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மண்டலம் வாரியாக இரவு நேர சிறப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் விபரம் வருமாறு:-
சிங்காரவேலன் (திருவொற்றியூர்)- 81449 30970,
ஏழுமலை (மணலி)- 81449 30570,
ஜாய்ஸ் சுமதி (மாதவரம்) - 81449 31122,
லட்சுமி தேவி (தண்டையார்பேட்டை) - 89398 56188,
பாவைகுமார் (ராயபுரம்) - 81449 30444,
ராமமூர்த்தி (திரு.வி.க.நகர்) - 81449 30958,
அன்பரசி (அம்பத்தூர்) - 81449 30956,
அகிலாண்டேஸ்வரி (அண்ணா நகர்) - 81449 30728,
வெண்ணிலா (தேனாம்பேட்டை) - 81449 31144,
புவனேஸ்வரன் (கோடம்பாக்கம்) - 81449 30540,
புஸ்பலதா (வளசரவாக்கம்) - 81449 30625,
உமா (ஆலந்தூர்) - 81449 30690,
வெங்கட்ராமன் (அடையாறு) - 81449 30848,
பிரேமா (பெருங்குடி) - 81449 30924,
கலைச்செல்வன் (சோழிங்கநல்லூர்) - 81449 30589.