குறைகள், புகார்களை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமனம்


குறைகள், புகார்களை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமனம்
x

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள், புகார்களை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

வேலூர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், அதனை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை தீர்ப்பதற்காக ரஞ்சிதா என்பவர் வேலூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் இருப்பின் 8925811344 என்ற செல்போன் மற்றும் ombudsmanmgnregsvellore@mail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் அளிக்கலாம்.

அதன்பேரில் குறைகள், புகார்கள் குறித்து விசாரித்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story