தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில்தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க அதிகாரி நியமனம்கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொழிலாளர்களின் குறைகளை தீர்க்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு குறைதீர்ப்பாளர் அதிகாரி பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ஏஞ்சல் கேத்ரின் என்பவர் கடலூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் அத்திட்டத்தில் குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரை 8925811304 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது cuddaloreombudsman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.