தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்


தற்காலிக ஆசிரியர் நியமனத்தை  ரத்து செய்ய வேண்டும்
x

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம்

சீர்காழி தென்பாதியில் தமிழக ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கல்யாணரங்கன் தலைமை தாங்கினார்.வட்டார செயலாளர் இளவழுதி, வட்டார தலைவர் சி.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க.சேகர் வரவேற்றார். அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதை ரத்து செய்துவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பண பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பழைய ஓய்வூய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, ஆசிரியர்கள் சொர்ணபால், கோவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.


Next Story