158 பேருக்கு பணி நியமன ஆணை
மயிலாடுதுறையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 158 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 158 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமில் 63 முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதி உடைய நபர்களை நேர்காணல் நடத்தி தேர்ந்தெடுத்தனர். இதில், குறிப்பாக டேப் பேபி கேர் என்ற நிறுவனம் மாற்றுத்திறனாளிகளை பணிக்கு தேர்வு செய்தனர்.
158 பேருக்கு நியமன ஆணை
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் 506 ஆண்கள், 303 பெண்கள் என 809 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
முகாமில் உதவி கலெக்டர் யுரேகா, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், நகர சபை தலைவர் செல்வராஜ், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் குணசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.