2 பேருக்கு பணி நியமன ஆணை


2 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேருக்கு பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

தென்காசி

ஆலங்குளம் தாலுகா குத்தபாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மகன் தினேஷ் கடந்த 2-7-2020 அன்று விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளார். அவரது தாய் இசக்கியம்மாள் என்பவருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியில் சமையலருக்கான பணி நியமன ஆணையை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று வழங்கினார்.

மேலும் ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி வெங்கடேஷ்புரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் இசக்கிதுரை என்பவர் கடந்த 15-12-2020 அன்று கொலை செய்யப்பட்டார். அவரது வாரிசுதாரரான அவரது மனைவி சொர்ண மணி என்பவருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் சமையலருக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார்.



Next Story