வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணை


வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணை
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 232 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

3 பேருக்கு பணிநியமன ஆணை

அதனை தொடர்ந்து வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களான 3 பேருக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் நல விடுதி சமையலர் பணியிடத்திற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை கலெக்டர் லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story