மாணவர்களுக்கு பாராட்டு


மாணவர்களுக்கு பாராட்டு
x

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தர்மபுரி

தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்கு மற்றும் நிதி பிரிவு அலுவலர்கள் நல அறக்கட்டளை சார்பில் கிராமப்புற அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் நிர்வாகி வேணுகோபால், நிர்வாகிகள் கோவிந்தராஜ், பார்த்தசாரதி, தண்டபாணி, ஆசிரியைகள் கண்ணகி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை தெரேசாள் வரவேற்றார்.

விழாவில் தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கலந்து கொண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சித்தேரி, பிக்கிலி கொள்ளஅள்ளி, பொம்மஅள்ளி, கிருஷ்ணாபுரம், இருமத்தூர், கம்பைநல்லூர் மற்றும் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன விழாவில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.


Next Story