அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதில் 6, 7, 8-ம் வகுப்பு பிரிவில் கலாஷிரி, ரம்யா, அட்சயா, தீபிகா, தியா, கிர்த்திகா, கீர்த்தனா ஆகியோர் குழு நடனத்தில் முதல் இடமும், 9, 10-ம் வகுப்பு பிரிவில் தனி நடனத்தில் முகிதா நாட்டுப்புற நடனத்தில் முதல் இடமும், சுசித்ரா கரகாட்டத்தில் முதல் இடமும், சுருதி ஒயிலாட்டத்தில் முதல் இடமும் பெற்று தேவகோட்டை வட்டார அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதே போல 6, 7, 8-ம் வகுப்பு இசை பிரிவில் தமிழ் அமுதன் முதல் இடமும், 9, 10-ம் வகுப்பு பிரிவில் வாசு முதல் இடமும், காய்கறி மூலம் விலங்குகள் செய்யும் போட்டியில் கணேஷ் முதல் இடமும் பெற்று தேவகோட்டை வட்டார அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்போட்டிகளுக்கு நடுவராக ஆசிரியர் ஜோசப் இருதயராஜ், ஆசிரியைகள் விமலா, ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டனர். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் பாராட்டினார்.