அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
சிவகங்கை
திருப்புவனம்,
காளையார்கோவிலில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் திருப்புவனம் ஒன்றியத்திலிருந்து திருப்புவனம் தெற்கு நடுநிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவிகள் மகாலட்சுமி, சுபா குழுவின் குப்பைமேனி, கூரைப்பூவின் பூச்சி எதிர்க்கும் தன்மை என்ற ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து அடுத்த நிலைக்கு தேர்வு பெற்று உள்ளனர். இந்த மாணவிகளை திருப்புவனம் தெற்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். மேலும் இம்மாணவிகள் தூத்துக்குடி வல்லநாட்டில் வரும் 11, 12-ந் தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story