மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி ஒன்றியம் கீழக்கிடாரம் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 17 பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினார். இதில் மணிகண்டன், ஜெகஸ்ரீதர், விஷால், கோகுல்நாத், சிவகரன், தமிழ்ச்செல்வன், அப்துல் ரகுமான், அருண்குமார், பர்தான், ஹசியா பேகம், தமிழ்ச்செல்வம், பவஸ்ரீ, திருமலை செல்வம் ஆகியோர் தேர்ச்சி அடைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் குருசாமி, ஆசிரியை பீர் பாத்திமா, தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளை கடலாடி வட்டார கல்வி அலுவலர் ருக்மணி தேவி உள்ளிட்ட ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்.
Related Tags :
Next Story