ஓசூரில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு பாராட்டு
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறையில், ஓசூர் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி வந்த செந்தில்குமரன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேன்கனிக்கோட்டை சமூக ஆர்வலரும், பல் டாக்டருமான சுப்பிரமணி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் முன்னிலை வகித்தார். விழாவின்போது, செந்தில்குமரன், பணிக்காலத்தில் செய்த பணிகளான, ஓசூர் உள் வட்ட சாலை, வெளிவட்ட சாலை தேன்கனிக்கோட்டை முதல் ஓசூர் வரை சாலை விரிவாக்கம், தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் சாலை சந்திப்பு மற்றும் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் சாலை வசதி செய்ததை நினைவுகூர்ந்து பாராட்டி பேசினர். மேலும் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த டி.எஸ்.பாண்டியன், ஆரிப் உல்லா, சூர்யா, வெங்கட்ராஜு, பாபு தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் திருமால், இளநிலை பொறியாளர் டேவிட், ஓசூர் உதவி பொறியாளர் வெங்கட்ராமன், கிருஷ்ணகிரி உதவி கோட்ட பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, செந்தில்குமரன் ஏற்புரை நிகழ்த்தினார்.