இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா
நெமிலி பாலா பீடத்தில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் சீனுராமசாமிக்கு பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி ஆத்மீக பாலரத்னா பட்டம் வழங்கி பாராட்டினார். அவர் தயாரித்து வெற்றி பெற்ற மாமனிதன் என்னும் திரைப்படத்தில் கிராமியத் தன்மைகளை காப்பாற்றும் நிகழ்ச்சிகளை அமைத்து நல்ல கருத்துக்களை சொன்னதைக் குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் சீனுராமசாமி தமக்களித்த பட்டத்தை மனித நேயத்துக்கு தக்கதாக கூறினார். குருஜி நெமிலி பாபாஜி தாம் எழுதிய ஆத்மீக நூல்களை அவருக்கு பரிசாக அளித்தார். நெமிலி ஆத்மீக குடும்பங்கள் விழா நிகழ்ச்சிகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story