மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x

மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்


மூத்த வாக்காளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்ளை கலெக்டர் வழங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் படி மூத்த குடிமக்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் 80 வயதிற்கு மேற்பட்ட 2 வாக்காளர்கள் என மொத்தம் 8 மூத்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையரிடமிருந்து வரப்பெற்ற பாராட்டு கடிதங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, தாசில்தார் குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்களை இல்லங்களுக்கு நேரடியாக சென்று தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை வழங்கி அலுவலர்கள் கவுரவித்தனர்.


Next Story