கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை திருச்சி மண்டல டி.ஐ.ஜி. வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூரில் கடந்த சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் என்பவரை அவரது நண்பர்களான மனோஜ்குமார் (வயது 24), கார்த்திகேயன் (27) ஆகியோர் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த மறுநாள் திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட்டை அடுத்த பனமங்கலம் பகுதியில் கொள்ளிடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த கொலையாளிகளான மனோஜ்குமார், கார்த்திகேயனை கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, போலீசார் அசோக்குமார், முத்துக்குமார் ஆகியோர் சாதுர்யமாக பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் இத்தகைய செயலை அறிந்த திருச்சி மண்டல டி.ஐ.ஜி.சரவணசுந்தர் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 3 போலீசாரை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கம் வழங்கி கவுரவித்தார்.
இதேபோல் துவாக்குடி மற்றும் மணிகண்டம் பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்குகளை விரைந்து விசாரணை ச செய்து நடவடிக்கை எடுத்த பாய்லர் ஆலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணியை டி.ஐ.ஜி.பாராட்டி சான்றிதழ், வெகுமதி வழங்கினார்.