அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 2022-10-23T00:15:11+05:30)

மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு செந்தில்குமார் எம்.எல்.ஏ. நினைவு பரிசு வழங்கினார்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தோ்வான நைனார்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் அருள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கலந்து கொண்டு மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்கள் பாலாஜி, கருப்பையா, அருண்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி இனிப்பு மற்றும் ஊக்கப்பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் போன்ற உயர் கல்வியை பெற்று பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரை பெற்று தருவதோடு சமுதாயத்துக்கும், நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக திகழ வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story