அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நாகையில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சி.க.சுப்பையா பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் மாரியப்பன் மற்றும் கவுசல்யா மாரியப்பன் ஆகியோர் பரிசுத்தொகைகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற மாணவர் மணிபாரதிக்கு ரூ.10 ஆயிரமும், வட்டுஎறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் விஜய்க்கு ரூ.7 ஆயிரத்து 500-மும், 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் 3-ம் இடம் பிடித்த மாணவர் ஜெகதீஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரமும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அன்பழகனுக்கு ரூ. 10 ஆயிரம், தேசிய வருவாய் திறனறித்தேர்வில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்ற மாணவர் சேரனுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.52 ஆயிரம் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story