விருதாச்சலம் போக்குவரத்து போலீஸ்காரருக்கு பாராட்டு
பாட்டுபாடி குற்றங்களை தடுக்க அறிவுரை வழங்கிய போக்குவரத்து போலீஸ்காரரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி வெகுமதி வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே கடலூர் மாவட்டம் விருதாச்சலம் டவுன் போக்குவரத்து போலீஸ் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சிவபெருமான் என்பவர் போக்குவரத்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொது மக்களிடையே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பாடல்களை பாடி நல்ல அறிவுரைகளை கூறி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை கிரிவலம் சென்ற பொதுமக்கள் பாராட்டினர்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அவரை நேரில் சென்று பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story