தண்டுபத்துஅனிதா குமரன் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா
தண்டுபத்துஅனிதா குமரன் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
உடன்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலராக தேர்வு செய்யப்பட்ட தண்டுபத்து சரஸ்வதி கந்தசாமி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் அனிதாகுமரனுக்கு பாராட்டு விழா, தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மீனா, துணை முதல்வர் சாந்தி ஜெயஸ்ரீ ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்கும் பாராட்டு விழா என இரு பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் கே.பி.கே.குமரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் கண்ணபிரான் வரவேற்றார். பள்ளியின் ஆலோசகர் ஆழ்வார் மற்றும் ஆசிரியர்கள் ஜா.ஜேம்சன், கோயில்பிள்ளை, செல்வராணி, உயர்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் பாலசரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பள்ளியின் சார்பாக ஆலோசகர் பேராசிரியர் ஆழ்வார், அனிதா குமரனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பள்ளி ஆட்சி குழு தலைவர் கே.பி.குமரன் நினைவு பரிசு கேடயம் வழங்கினார். கே.பி.கே. குமரன் சி.பி.எஸ்.இ.பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சத்தியகலா நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் உமா செல்வகுமாரி தொகுத்து வழங்கினார்.