முதலிடம் பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
தேசிய திறன் தகுதி தேர்வில் முதலிடம் பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
திருப்பத்தூர்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய திறன் தகுதி வரைவு திட்டத்துறையும் நடத்திய ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் தகுதி தேர்வில் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியரும், திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான சி.ரவிவர்மன் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார் சான்று வழங்கி பாராட்டினார்.
அப்போது வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட கிரீன் டிரஸ்ட் இயக்குனர் மார்க்க சகாயம், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ம.ப.இளவரசி, மாவட்ட தேசிய பசுமைப்படை உதவி ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story