தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
அரசினர் ஐ.டி.ஐ.யில் 13-ந் தேதி தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
நெல்லை:
நெல்லை பேட்டை அரசினர் ஐ.டி.ஐ.யில், பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் பங்கேற்க வருகிறவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் http://dgt.gov.in/appmela2022/establishment.php என்ற இணையதளத்திலும், இளைஞர்கள், இளம்பெண்கள் http://dgt.gov.in/appmela2022/candidate registration.php என்ற இணையதள முகவரியிலும் தங்களது பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில் பதிவினை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.