ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல் குறித்த பயிற்சி
ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல் குறித்த பயிற்சி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல் குறித்த பயிற்சி திருப்பூரில் 2 நாட்கள் நடைபெற்றது.
எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1,2,3 ஆகிய வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆசிரியர் திறன் மேம்பாட்டு நாட்காட்டியின்படி எண்ணும் எழுத்தும் திட்ட மாநில அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் மற்றும் பொறுப்பு முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
வட்டார அளவில் 6-ந் தேதி முதல் பயிற்சி
பயிற்சியின் நோக்கம், குறிக்கோள், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்தல், வகுப்பறை செயல்பாடுகள் வடிவமைத்தல், கற்றல் மூலைகளின் பயன்பாடு, மதிப்பீட்டு பணியின் முக்கியத்துவம், வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி திட்டம் குறித்து முதல்வர் விளக்கி கூறினார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார அளவில் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 1,866 ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி வழங்க உள்ளனர். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
-----------
குறிப்பு படம் உண்டு.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்த போது எடுத்த படம்.
----
Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur