மீன் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்


மீன் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
x

வாலாஜாவில் மீன் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் உள்பட மீன்வளம் சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தலைமை தாங்கினார். மீன்வள ஆய்வாளர் பாரத்குமார் வரவேற்றார்.

முகாமில் மீன்வளர்ப்பு, அதற்கான மானியத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சோமசுந்தர் விளக்கினார். மீன் பண்ணை அமைத்தல், மீன் வளர்ப்பு, நோய் தடுப்பு குறித்து மீன் வள ஆலோசகர் சீனிவாசன் விளக்கினார். முடிவில் மீன்வள மேற்பார்வையாளர் விவேக் நன்றி கூறினார்.


Next Story