மீன்வளர்ப்பு பயிற்சி


மீன்வளர்ப்பு பயிற்சி
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரெகுநாதபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஜெகோவா ஷம்மா கடல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி சார்பில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர்நீர் மீன்வளர்ப்பு முறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முடிவீரன்பட்டினம் கிராமத்தில் பயனாளிகளுக்கு உவர்நீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் செஸ் செரேபியா கலந்து கொண்டு வணிக முக்கியத்துவம் வாய்ந்த கரி மீன், ஒற்றை தேவதை, கோமாளி மீன் போன்ற மீன்களின் வளர்ப்பு, இனப்பெருக்கம், தீவனம், நோய் மேலாண்மை குறித்து விளக்கமளித்தார். இதில் 93 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை திட்ட இணை அலுவலர் ஜெயபவித்ரன், களப்பணியாளர் தேவநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story