விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி
நாகப்பட்டினம்
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022- 23 திட்டத்தின் கீழ் கீழதஞ்சாவூரில் மிதவை தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கணேசன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்ட தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் கோபாலகண்ணன் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story