நெல்வயலில் மீன்வளர்ப்பு பயிற்சி


நெல்வயலில் மீன்வளர்ப்பு பயிற்சி
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல்வயலில் மீன்வளர்ப்பு பயிற்சி

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இரட்டிப்பு வருமானத்துக்கு நெல் வயலில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை விஞ்ஞானி து.பெரியார் ராமசாமி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

விவசாயிகள் நெல் வயலில் மீன் வளர்ப்பு செயல்விளக்கத் திடல், வசம்பு திடல் மற்றும் காளான் வளர்ப்பு போன்ற செயல் விளக்க திடல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, நெல் வயலில் பயன்படுத்தக்கூடிய உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை, இனக் கவர்ச்சிப்பொறி, மஞ்சள் நிற ஒட்டும் பொறி மற்றும் வயல் நீர் குழாய் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டன.முடிவில் அலுவலக கண்காணிப்பாளர் மதியழகன் நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வை. ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.


Next Story