அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியின் 86-வது மற்றும் 87-வது பொது பேரவைக் கூட்டம் தலைவர் ஷியாம்குமார் தலைமையில் அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்றது.
துணை பதிவாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். வங்கி பொது மேலாளர் ஏ.கருணாகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மண்டல இணைப்பதிவாளர் சரவணன் கலந்துகொண்டு பேசுகையில், ''சிறு வியாபாரம் செய்பவர்களுக்காக கூட்டுறவு வங்கியில் பல்வேறு தொழில் கடன்களும், மேலும், குறைந்த வட்டியிலான நகை கடன்களும் வழங்கப்படுகிறது.
சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக இந்த கடன்களை பெற்று பயனடையலாம்'' என்றார். கூட்டத்தில் நிர்வாக இயக்குனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story