ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர்
ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர்
ராணிப்பேட்டை
அரக்கோணம்
ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்தனர்
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி திறக்கப்பட்டு, ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு, நாமக்கல் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து அதி நவீன மீட்பு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 25 பேர் 3 குழுக்களாக புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story