ஆரணி பகுதி கோவில்களில் மகா தீபம்
ஆரணி பகுதி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஆரணி
ஆரணி பகுதி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அனைத்து கோவில்களிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் கசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா அலங்காரம் செய்து தீபாரத்துடன் நடைபெற்றது. மாலையில் கோவில் மேல்தளத்தில் பெரிய செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'அரோகரா' என முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கோட்டை கயிலாயநாதர் கோவில், கோட்டை வேம்புலி அம்மன் கோவில், அரியாத்தம்மன் கோவில், பூமிநாதர் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், பையூர் - சேவூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பெரிய கொப்பரைகள், பெரிய அகண்டத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து வீடுகளிலும், கடை, அலுவலகம், தொழிற்நசாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.