ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகம் எதிரே ஆரணி நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறுப்படுகிறது. இதனை கண்டித்து தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் சிலர் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே அழைத்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்று, நகரமன்ற துணைத்தலைவர் நடத்தி வரும் இனிப்பு கடையில், ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், பாரி பி.பாபு ஆகியோர் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதேபோல் தி.மு.க.வினரும் புகார் மனு அளித்தனர்.


Next Story