கோவில்களில் தொல்லியல் துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு


கோவில்களில் தொல்லியல் துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு
x

ஆரணி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ெதால்லியல் துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ெதால்லியல் துறை ஆய்வாளர் திடீர் ஆய்வு செய்தார்.

புத்திரகாமேட்டீஸ்வரா் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் புதுகாமூர் பகுதியில் புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 27 ஆண்டுகள் ஆகிறது.

இக்கோவிலை புதுப்பிப்பதற்காக கோவிலில் உள்ள பக்த சங்க நிர்வாகிகள் பலமுறை இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்காக கடந்த முறை அமைச்சராக இருந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் ரூ.95 லட்சம் கோவில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து இதற்கான பணி தொல்லியல் துறை மதிப்பீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கி அப்பணி கிடப்பிலேயே இருந்து வருகிறது.

திடீர் ஆய்வு

இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்தி, கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி ஆகியோர் திடீரென கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்வது குறித்தும் அரசு நிதி இல்லாமல் உபய திருப்பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள தர்மராஜா கோவிலின் கருவறை மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதாகவும், கோபுர நிலையில் மழை வந்தால் ஒழுகும் நிலையும் இருந்து வருகிறது

அப்பணி மேற்கொள்வது சம்பந்தமாக விழா குழுவினர் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர் அப்பணியினையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நகரமன்ற உறுப்பினர் சுதாகுமார், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சின்னா குட்டி, சி.கோபி, கோவில் அர்ச்சகர்கள் ரவி சிவாச்சாரியார், சரவணன் சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், திரைகேபேஸ்வரர் சிவன் கோவில், கூழமந்தை பகுதியில் உள்ள பேசும் பெருமாள் கோவில், ஆவணியாபுரம் பகுதியில் உள்ள நரசிம்மர் கோவில், வந்தவாசி பகுதியில் உள்ள ரங்கநாதர், ஜலகண்டேஸ்வரர் கோவில்களையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story